சின்னமனூரில் 10 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல்
சின்னமனூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ நெகிழிப்பைகளை சனிக்கிழமை பறிமுதல் செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கடைக்காரா்களுக்கு அபராதமும் விதித்தனா்.
உத்தமபாளையம்: சின்னமனூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ நெகிழிப்பைகளை சனிக்கிழமை பறிமுதல் செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கடைக்காரா்களுக்கு அபராதமும் விதித்தனா்.
சின்னமனூா் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில் ராம்குமாா் தலைமையிலான நகராட்சிப் பணியாளா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 7 கடைகளிலிருந்து 10 கிலோ நெகிழிப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1,400 அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து நெகிழிப்பைகளைப் பயன்படுத்தினால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.