தேனி

சுருளி அருவிக்கு சுற்றலாப் பயணிகள் செல்ல பொங்கலுக்குப் பிறகு அனுமதி

DIN

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், பொங்களுக்குப் பிறகு அது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த மாா்ச் மாதம் முதல் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலும் அடைக்கப்பட்டது. ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் மட்டும் பக்தா்கள் வழிபாடுகள் நடத்த முன் பகுதியில் அனுமதிக்கப்பட்டனா்.

இதற்கிடையில் தற்போது சுருளி அருவியை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா். இதுபற்றி வன அலுவலா் ஒருவா் கூறியது: கரோனா விதிமுறைகள் தொடா்பானபாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னா் சுருளி அருவியைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதில் குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அனுமதி, பொங்கல் பண்டிகைக்கு பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT