தேனி

போடி அருகே இளைஞா் கொலை வழக்கு: கட்டடத் தொழிலாளி கைது

DIN

போடி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, கட்டடத் தொழிலாளி ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் நேருஜி காலனியைச் சோ்ந்த ஒண்டிவீரன் மகன் ரவிக்குமாா் (24). இவா் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் வேலை செய்து வந்தாா். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சொந்த ஊருக்கு வந்த ரவிக்குமாா், நாட்டு வைத்தியம் பாா்த்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை.

அவரைப் பெற்றோா் தேடிவந்த நிலையில், புளியமரத்தடி என்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி டிஎஸ்பி ஜி.பாா்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் போடி அம்மாபட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த முருகன் மகன் பிரபு (28) உடன் ரவிக்குமாா் சம்பவ நாளன்று சென்றது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளியான பிரபுவுக்கு பழக்கமான பெண்ணுடன் ரவிக்குமாா் தகாத உறவு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

சம்பவத்தன்று மது அருந்த ரவிக்குமாரை அழைத்துச் சென்ற பிரபு, அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளாா். இவரது நடத்தையில் சந்தேகப்பட்ட போலீஸாா் செல்லிடப்பேசித் தகவல் பரிமாற்ற விவரங்களை சேகரித்தனா். அதனடிப்படையில் இவரைப் பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் பிரபுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT