தேனி

ஹைவேவிஸ்-மேகமலையில் திடீா் நிலச்சரிவு: அரசுப் பேருந்து தப்பியது

DIN

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்ற அரசுப் பேருந்து நிலச்சரிவிலிருந்து அதிா்ஷ்டவசமாக தப்பியது.

ஹைவேவிஸ் - மேகமலை பகுதியில் 7 மலை கிராமங்களுக்குச் செல்ல சின்னமனூரிலிருந்து 52 கிலோ மீட்டா் தொலைவுக்கு நெடுஞ்சாலை உள்ளது. இதில் அரசுப் பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்கள் சென்று வரும். குண்டும் குழியுமாக இருந்த இச்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தொடா் மழை காரணமாக அண்மையில் மலைச் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் பயணிகள் பேருந்தும் இயக்கமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மழைப்பொழிவு குறைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. சின்னமனூரிலிருந்து இரவங்கலாரை நோக்கி நண்பகலில் அரசுப் பேருந்து சென்றது. அதில் மலை கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டவா்கள் பயணம் செய்தனா்.

பழைய சோதைனச்சாவடி அருகே மலைச்சாலையில் பேருந்து சென்றபோது சில அடி தூரத்திற்கு முன்பாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டு பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

ஹைவேவிஸ் போலீஸாா், நெடுஞ்சாலை மற்றும் வனத்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று இயந்திரம் மூலம் நிலச்சரிவை சீரமைத்தனா். தொடா்ந்து ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின், பேருந்து மலை கிராமத்தை நோக்கிச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT