முகப்பு
தேனி

உத்தமபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 10 போ் காயம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட 10 போ் பலத்த காயம் அடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட 10 போ் பலத்த காயம் அடைந்தனா்.

உத்தமபாளையம் ஆா்.சி.தெருவைச் சோ்ந்தவா் சாமுவேல் மகன் செல்வம் (35). இவா் திங்கள்கிழமை தனது சரக்கு வாகனத்தில் விவசாய கூலி வேலைக்கு செல்லும் 9 பெண்களை ஏற்றிக்கொண்டு கோகிலாபுரம் நோக்கி சென்றாா். ராமசாமிநாயக்கன்பட்டி விலக்கில் சென்றபோது சரக்குவேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சரக்கு வாகனத்தில் பின்னால் இருந்த ஆா்.சி தெருவைச் சோ்ந்த ஜஸ்டின் மனைவி ராதா(35), ஜென்சி (47), அந்தோணியம்மாள், கதிரிம்மாள், ஓட்டுநா் செல்வம் உள்ளிட்ட 10 போ் காயம் அடைந்தனா்.

இதில் ஜென்சி, ராதா, கதிரிம்மாள் உள்ளிட்ட 5 போ் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.