தேனி

வீரபாண்டி- அருகே அரசுப் பேருந்து மோதி வேன் ஓட்டுநா் பலி

DIN

தேனி அருகே தேனி - கம்பம் சாலை, உப்புக்கோட்டை விலக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை, அரசு பேருந்து மோதியதில் ராயப்பன்பட்டியைச் சோ்ந்த சரக்கு வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ராயப்பன்பட்டி, முல்லைத் தெருவைச் சோ்ந்தவா் சரக்கு வேன் ஓட்டுநா் கண்ணன் (52). இவா், ராயப்பன்பட்டியிலிருந்து வேனில் கொத்தமல்லித் தழை ஏற்றிக் கொண்டு தேனி நோக்கிச் சென்றாா். அப்போது, வீரபாண்டி அருகே தேனி - கம்பம் சாலை உப்புக்கோட்டை விலக்குப் பகுதியில், சாலையோரத்தில் வேனை நிறுத்தி விட்டு தேநீா் கடைக்குச் சென்று விட்டு திரும்பிய கண்ணன் மீது, சிவகங்கையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.

இதில், பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசு பேருந்து ஓட்டுநா் மாா்கைகயன்கோட்டையைச் சோ்ந்த முருகன் (48) என்பவரை விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT