முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
தேனிமுல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 752 கனஅடி தண்ணீர் கூடுதலாக அணைக்கு வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நிலவரப்படி மழை பெய்யவில்லை, அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் திங்கள்கிழமை நிலவரப்படி பெரியாறு அணையில் விநாடிக்கு 22.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 10.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு விநாடிக்கு 1,006 கனஅடி தண்ணீர் வந்தது. ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 254 கன அடி தண்ணீர் வந்த நிலையில், திங்கள்கிழமை 1,006 கனஅடி தண்ணீர் வந்தது. ஒரேநாளில் விநாடிக்கு 752 கனஅடி தண்ணீர் கூடுதலாக அணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாறு அணையின் நீர்மட்டம், 127.80, (மொத்த உயரம் 142 அடி) நீர் இருப்பு 4,223 மில்லியன் கன அடி, நீர்வரத்து 1, 006 கனஅடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,755 கன அடி.
இதுபற்றி பெரியாறு அணையின் பொறியாளர் ஒருவர் கூறும்போது, அணை பகுதிகளில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.