காமயகவுண்டன்பட்டி: வளைகாப்பு முடிந்ததும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்
காமயகவுண்டன்பட்டியில் வளைகாப்பு முடிந்ததும், திங்கள்கிழமை கர்ப்பிணிப் பெண் தடுப்பூசி போட்டுக் கொண்டதை மருத்துவமனை ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
காமயகவுண்டன்பட்டியில் வளைகாப்பு முடிந்ததும், திங்கள்கிழமை கர்ப்பிணிப் பெண் தடுப்பூசி போட்டுக் கொண்டதை மருத்துவமனை ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 25க்கும் மேலான கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்த நந்தினி சதீஷ்குமார் என்பவருக்கு
வளைகாப்பு நடைபெற்றது.
அப்போது கிராம சுகாதார செவிலியர் தடுப்பூசி போடுவதாக நந்தினிக்கு தகவல் தெரிவித்ததும் வளைகாப்பு முடிந்த கையோடு கர்ப்பிணிப் பெண் நந்தினி
கணவர் சதீஷ்குமாருடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணி பெண்ணை மருத்துவ அலுவலர் சுதா, சித்த மருத்துவ ரஷ் சிராஜ் தீன், செவிலியர் மரியா, கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.
இது பற்றி சித்த மருத்துவர் சிராஜ்தீன் கூறுகையில், தடுப்பூசி போட்டுக்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கேடு என்று தவறான கருத்து உள்ளது. அந்த கருத்தை மறுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 7 மாதம் ஆன கர்ப்பிணிப் பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்று தெரிவித்தார்.