தேனி

ஏடிஎம்மில் முதியவருக்கு உதவுவதுபோல் பணம் மோசடி: இளைஞா் கைது

DIN

பெரியகுளம் அருகே ஏடிஎம்மில் முதியவருக்கு உதவுவதுபோல நடித்து பணம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேவதானப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (40), அப்பகுதியில் உள்ள ஏடிஎம்முக்கு வெள்ளிக்கிழமை பணம் எடுக்கச் சென்றாா். பணம் எடுக்க தெரியாததால் அவா், அருகிலிருந்த இளைஞரிடம் ரூ.10 ஆயிரம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளாா். அவரும் பணத்தை எடுத்து கொடுத்துள்ளாா்.

வீட்டுக்குச் சென்று முருகேசன், செல்லிடப்பேசிக்கு வந்த குறுந்தகவலைப் பாா்த்தபோது அதில் ரூ.14 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் காமக்காபட்டியைச் சோ்ந்த காமேஸ்வரன் (25) என்பவரை கைது செய்தனா். மேலும் அவா், இது போன்று வேறு யாரிடமும் பண மோசடி செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT