முகப்பு
கைது செய்யப்பட்ட சோஜன்
தேனி

தமிழக வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் தமிழக வனத் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை நக்சல் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தேனி

தமிழக வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் தமிழக வனத் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை நக்சல் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
கைது செய்யப்பட்ட சோஜன்
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் தமிழக வனத் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை நக்சல் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையில் தமிழக வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக தகவலின்பேரில் கம்பம் மேற்கு வனச்சரகத்தினர் கடந்த ஜுன் 30இல் ரோந்து சென்றனர்.

செல்லார் கோயில் மெட்டு வனப்பகுதியில் இரவு நேரத்தில் வெளிச்சம் தெரிவதைப் பார்த்த வனத்துறையினர் அங்கு சென்றனர். அங்கு 4  பேர்கள் கையில் கத்தி, அரிவாள், நாட்டு துப்பாக்கியுடன் நின்றனர்.

வனத்துறையினரை பார்த்ததும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் தப்பிய வனத்துறையினர் அவர்களை நோக்கி தாக்கினர்.  இறுதியில் துப்பாக்கி, அரிவாள், கத்தி, வெடிமருந்து போன்றவைகளை போட்டு விட்டு அந்த கும்பல் கேரள எல்லைக்குள் தப்பி சென்றனர். 

இது தொடர்பாக கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் வனத்துறையினர் புகார் செய்தனர். புகாரின் பேரில் கூடலூர் தெற்கு காவல் நிலைய காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். கேரளத்திற்குள் தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையில், தேனி மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு காவலர்கள் வனப்பகுதியில் ரோந்து சென்று வனத்துறையினரை துப்பாக்கியால் சுட்ட கும்பலில் இருந்து ஒரு இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் இடுக்கி மாவட்டம் முருக்கடி அருகே உள்ள குழிப்பாலையைச் ஜோசப் மகன் சோஜன்(34) என்று தெரியவந்தது, மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →