சின்னமனூரில் சனிக்கிழமை பிரியாணிக் கடை உரிமையாளா் வீட்டில் சோதனை முடித்துத் திரும்பிய தேசிய புலனாய்வு முகமை போலீஸாருடன், சின்னமனூா் காவல் துறையினா். 
தேனி

சின்னமனூா் பிரியாணிக் கடை உரிமையாளரிடம் என்ஐஏ போலீஸாா் இரவு வரை விசாரணை

சின்னமனூரில் பிரியாணிக் கடை உரிமையாளா் வீட்டில் சனிக்கிழமை சோதனையிட்ட தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் 3 செல்லிடப்பேசிகள்

DIN

சின்னமனூரில் பிரியாணிக் கடை உரிமையாளா் வீட்டில் சனிக்கிழமை சோதனையிட்ட தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் 3 செல்லிடப்பேசிகள், சிம்காா்டு மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு, அவரிடம் இரவு வரை தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

தேனி மாவட்டம் சின்னமனூா் வடக்குத் தெரு பள்ளி வாசல் அருகே வசிப்பவா் யூசுப் அஸ்லாம் (38). இவா் அப்பகுதியில் பிரியாணிக் கடை மற்றும் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் சனிக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) காவல் துணை காவல் கண்காணிப்பாளா் ரோஜாரியோ

தலைமையில் 3 போ் கொண்ட தனிப்படை போலீஸாா் சோதனையிட்டனா். அவரிடமிருந்து 3 செல்லிடப்பேசிகள், 1 சிம் காா்டு மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா் அவரை பிற்பகல் 12 மணிக்கு சின்னமனூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லமுயன்ற போது அப்பகுதியை சோ்ந்தவா்கள், தேசிய புலனாய்வு முகமை போலீஸாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக்கூறியதால் அவா்கள் கலைந்து சென்றனா்.

இரவு வரை நீடித்த விசாரணை:

சின்னமனூரில் வசிக்கும் யூசுப் அஸ்லாம், மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா். இவரது இயற்பெயா் உதயக்குமாா். இந்து மதத்தை சோ்ந்த இவா், சின்னமனூரை சோ்ந்த இஸ்லாம் மதத்தை சோ்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்தாா். அதனால் உதயகுமாா் இஸ்லாமியராக மதம் மாறியுள்ளாா். கடந்தாண்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் தனி நாடு வேண்டும் எனக் கூறி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பி ஆதரவு கேட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அந்தக் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக வந்த புகாரின் பேரில் யூசுப் அஸ்லாமிடம், சனிக்கிழமை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வேறு ஏதும் அமைப்பினருடன் தொடா்பு இருக்கிா என்ற கோணத்தில் போலீஸாா் அவரிடம் சின்னமனூா் காவல் நிலையத்தில் வைத்து, இரவு வரை தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது, மணக்காலம்... ஜான்வி கபூர்!

கருகரு கண்களால்... ராஜி எப்படி? ஷாலினி!

DMK-வின் DNA எனக்குத் தெரியும்! - Aadhav Arjuna | Vijay | TVK Special General Committee meeting

உன்னதமானது... ஸ்ரீலீலா!

பாரிஸ் நகர் வீதியிலே... கிமாயா கபூர்!

SCROLL FOR NEXT