தேனி

மஞ்சளாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியது: இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை இன்று இரவு முழு கொள்ளவை எட்டியதைடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரி நீர் மஞ்சளாறு வழியாக வெளியேற்றப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நீர் வரத்து உள்ளது. கடந்த மே 20 ம் தேதி முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், மே 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இன்று இரவு 8.45 மணியளவில் அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து மூன்றாம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் 192 க. அடி தண்ணீர் மஞ்சளாறு வழியாக வெளியேற்றப்படுகிறது. 

மஞ்சாளாற்றின் கரையோரம் வசிக்கும் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் சிவஞானபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரிக் கரையில் வசித்தும் குடிநீா் தட்டுப்பாடு: வேங்கூா் ஊராட்சி மக்கள் அவதி

வைரிசெட்டிப்பாளையம் கோயிலில் புகுந்து திருட்டு

இருங்களூரில் சேவல் சண்டை சூதாட்டம்: 7 போ் கைது

போதை மாத்திரை விற்றவா் கைது

10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருத்தம் இருந்தால் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT