முகப்பு
முல்லைப்பெரியாறு அணை
தேனி

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கேரளத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தேனி

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கேரளத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
முல்லைப்பெரியாறு அணை
பகிர்:

கேரளத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

வெள்ளிக்கிழமை அணைக்குள் விநாடிக்கு 365 கனஅடியாக தண்ணீர் வந்தது, தென்மேற்கு பருவ மழை, சாரல் மழையாக பெய்யத்தொடங்கியதால், சனிக்கிழமை பெரியாறு அணைப்பகுதியில் 40 மில்லி மீட்டரும், தேக்கடியில் 9.6 மில்லி மீட்டரும் மழை பெய்தது.  இதனால் அணைக்குள் விநாடிக்கு 909 கனஅடி தண்ணீர் வந்தது.  தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 900 கனஅடியாகவும் வெளியேற்றப்பட்டது.

பெரியாறு அணையில் நீர்மட்டம் 130.40 அடியாகவும், (கொள்ளளவு 142 அடி),  நீர் இருப்பு 4,791 மில்லியன் கனஅடியாகவும், நீர் வரத்து 909 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 900 கன அடியாகவும் இருந்தது. லோயர்கேம்ப்பில் பெரியாறு மின்சார நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகளில் தலா 42, 41 மெகாவாட் என மொத்தம் 83 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது பற்றி பெரியாறு அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் கூறியது, கேரளத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது, வரும் காலங்களில் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →