முகப்பு
தேனி

கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழப்பு

கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

கூடலூரில் அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், கூடலூர் 12 ஆவது வார்டு, தொட்டியர் காளியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் கருணாநிதி(72), இவரது அண்ணன் திங்கள்கிழமை இறந்து விட்டார், இவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மயானத்திற்கு சென்றுவிட்டு, உறவினரின் மோட்டார் பைக்கில் வீட்டுக்கு வந்து, சிறிது தூரம் நடந்து சென்றார். 

அப்போது மயங்கி கீழே விழுந்தவரை கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்து, அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது பற்றி கூடலூர் தெற்கு காவல் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை செய்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →