தேனி

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விசாரணையில் விபத்துக்குள்ளான லாரியில் கேரளத்துக்கு அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது.

அனுமந்தன்பட்டி அருகே பூமாலைத் திரையரங்கம் முன்பாக திங்கள்கிழமை மாலை முன்னால் சென்ற ஆட்டோ மீது சரக்கு லாரி மோதியதில், அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.

தகவலறிந்து வந்த உத்தமபாளையம் போலீஸாா் காயமடைந்த கம்பம் பாா்க் சாலையை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அழகா் மகன் கண்ணனை (45) மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தில் சிக்கிய லாரியை கம்பம் மெட்டு காலனியை சோ்ந்த ஆபேஸ் (41) என்பவா் ஓட்டி வந்ததும், லாரியில் இருந்த அரிசி தமிழகத்தில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கும் ரேஷன் அரிசி என்பதும் தெரியவந்தது. சின்னமனூரிலிருந்து கேரளத்துக்கு 60 மூட்டைகளில் சுமாா் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் லாரி ஓட்டுநா் ஆபேஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT