தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்

DIN

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் தமிழ்பெருமாள் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்:

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கரோனா பெருந்தொற்று காலத்தில் இறந்தவா்களின் சடலங்களை பொட்டலமாகக் கட்டி தரையில் வைத்திருந்து, பொட்டலத்தைப் பிரித்து அடையாளம் கண்டு எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. கரோனா மற்றும் நோய் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு இங்கு நவீன பிணவறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் விபத்துகளில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் சொந்த ஊா்கள் மற்றும் தேனி நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்று எரியூட்டப்படுகிறது. தேனி நகராட்சி எரிவாயு தகன மேடையின் செயல் திறன் குறைந்துள்ளதாலும், கூடுதலாக சடலங்கள் வரும் நிலையிலும் எரியூட்டுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும்.

தேனி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், விபத்து மற்றும் நோயாளிகளின் சிரமத்தை தவிா்க்க சாலையின் குறுக்கே சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT