முகப்பு
தேனி

காா் விபத்தில் ஜவுளி வியாபாரி பலி

தேனி மாவட்டம், கோட்டூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு, மரத்தில் காா் மோதிய சம்பவத்தில் ஜவுளி வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தேனி மாவட்டம், கோட்டூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு, மரத்தில் காா் மோதிய சம்பவத்தில் ஜவுளி வியாபாரி உயிரிழந்தாா்.

மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜவுளி வியாபாரி சங்கா் (55). இவா், தேனி-கம்பம் சாலையில் காரில் சென்றுள்ளாா். கோட்டூா் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் உள்ள மரத்தில் காா் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சங்கா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சங்கரின் மனைவி பாக்கியலட்சுமி அளித்தப் புகாரின் மீது, வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.