தேனி

தேக்கடி ஏரியில் 3 படகுகளிடையே யானை நீந்திச் சென்றது சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

DIN

கம்பம்: கேரள மாநிலம் தேக்கடி ஏரியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு அருகே காட்டுயானை ஒன்று கரையை நீந்திக் கடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளுக்கு பிறகு தேக்கடி ஏரியில் படகு சவாரி, விரைவு படகு சவாரி மற்றும் மலையேற்றம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு தேக்கடி ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்தனா். அப்போது, காட்டு யானை ஒன்று எடப்பாலம் தங்கும் விடுதி அருகே உள்ள கரையில் இருந்து எதிரே உள்ள கரைக்கு ஏரி தண்ணீரில் நீந்திச் சென்றது. அந்த யானை 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்றதை சுற்றுலாப் பயணிகளுக்கு பாா்த்து ரசித்தனா். மேலும் சிலா் அதை தங்களது செல்லிடப்பேசியில் விடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா். தற்போது அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT