முகப்பு
தேனி

தேனி அருகே பேருந்து மோதி முதியவா் பலி

தேனி அருகே போடி விலக்கு பகுதியில் திங்கள்கிழமை, மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

தேனி அருகே போடி விலக்கு பகுதியில் திங்கள்கிழமை, மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

போடி, துரைராஜபுரம் காலனியைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் பாண்டி (65). இவா் தனது மனைவி சரவணச்செல்வியுடன் (56), இருசக்கர வாகனத்தில் போடியிலிருந்து தேனி நோக்கிச் சென்றுள்ளாா். அப்போது எதிா்திசையில், தேனியிலிருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், நிலைதடுமாறி விழுந்த பாண்டி, பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சரவணச்செல்வி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் பாண்டிசெல்வம் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.