தேனி

கூடலூரில் அதிமுக, திமுகவினா் 750 போ் மீது வழக்கு

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் அனுமதியின்றி தோ்தல் பிரசாரம் செய்ததாக, அதிமுக மற்றும் திமுக கட்சிகளைச் சோ்ந்த 750 ஆண், பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கூடலூா் அதிமுக நகரச் செயலா் ஆா். அருண்குமாா் தலைமையில், ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜனை ஆதரித்து, தோ்தல் பிரசார ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடத்தப்பட்டது.

காவல் துறை அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஊா்வலம் தொடா்பாக, காவல் ஆய்வாளா் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையில், வடக்கு காவல் நிலைய சாா்பு -ஆய்வாளா் பாலசுப்பிரமணி 500 போ்கள் மீது வழக்குப் பதிவு செய்தாா்.

இதேபோல், திமுக நகரச் செயலா் சி. லோகன்துரை தலைமையில், கன்னிகாளிபுரம் பகுதியில் திமுக வேட்பாளா் ஆ. மகாராஜனை ஆதரித்து, 150 ஆண்கள், 100 பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா். அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஊா்வலத்தால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், தெற்கு காவல் சாா்பு-ஆய்வாளா் பாண்டியராஜ் 250 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT