தேனி

போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவு: 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு 

DIN

போடிமெட்டு மலைக்சாலையில் பாறைகள் சரிவு ஏற்பட்டதால் திங்கள்கிழமை 10 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தேனி மாவட்டம், போடி மெட்டு மலைச்சாலை 17 தொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம், கேரளத்தை இணைக்கும் முக்கிய மலைச்சாலையாக உள்ளது. இந்த மலைச்சாலையில் எஸ் வளைவுக்கு மேல் ஆகாயப் பாறை பகுதியில் ஞாயிறு இரவு திடீரென ஒரு பாறை சரிந்து விழுந்தது. 

ஒரு சில சரக்கு வாகனங்கள் சென்றன. தொடர்ந்து அதே இடத்தில் அடுத்தடுத்து ராட்சத பாறைகள் சரிந்து சாலை முழுவதும் மூடியது. இதனால் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகம், கேரளத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ள நிலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மட்டும் சென்று வந்த நிலையில் தற்போது அந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் கம்பம் மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டன. பாறை சரிந்ததில் சாலையின் ஒரு பகுதியில் விரிசலும் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் 10 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT