தேனி

போடியில் முழு பொதுமுடக்கு அமல்: தடையை மீறி வந்த வாகனங்கள் பறிமுதல் 

DIN

போடியில் திங்கள் கிழமை தளர்வுகளற்ற பொது முடக்கு அமலுக்கு வந்த நிலையில் தடையை மீறி வந்த வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். 
திங்கள் கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற பொதுமுடக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போடி பகுதியில் காலையில் சிலர் சாலைகளில் சென்று வந்தனர். இவர்களை போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
இருந்தபோதிலும் போடி பழைய பேருந்து நிறுத்தம், எஸ்.எஸ்.புரம், திருமலாபுரம், போஸ்பஜார், சுப்புராஜ் நகர், வஞ்சி ஓடை தெரு, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். போடி சாலைக் காளியம்மன் கோவில், போடி ரெங்கநாதபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த காவல்துறை கரோனா தடுப்பு சோதனை சாவடிகளில் போலீஸார் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இ-பதிவு பெறாத வாகனங்களை திருப்பி அனுப்பினர். 
தேவையின்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். போடி பகுதியில் முக்கிய சாலைகளான பெரியாண்டவர் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை ஆகிய சாலைகளில் பழைய பேருந்து நிறுத்தம், தேவர் சிலை ஆகிய இடங்களில் போலீஸார் போக்குவரத்தை தடை செய்து தடுப்புகள் அமைத்துள்ளனர். போடி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT