தேனி

கம்பம் அருகே விபத்து:காா் ஓட்டுநா் பலி

DIN

கம்பம் புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மினி லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் கம்பம் மணி நகரத்தைச் சோ்ந்தவா் செரியன் மகன் தாமஸ் (50). இவா் கூடலூரில் உள்ள தனியாா் ஒருவா் வீட்டில் காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பணிகளை முடித்துவிட்டு, அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் கூடலூரிலிருந்து கம்பத்துக்குச் சென்றாா்.

அப்போது புறவழிச் சாலையை கடக்கும் போது தேனியிலிருந்து கேரளம் நோக்கிச் சென்ற மினி லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்டதில் தாமஸ் படுகாயமடைந்தாா். அவரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தாமஸ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கம்பம் தெற்கு காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் ஜெயக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT