தேனி

செவிலியா் கொலை வழக்கு: 3 தனிப்படை அமைத்து விசாரணை

DIN

ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் வியாழக்கிழமை, அரசு மருத்துவமனை செவிலியா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தவா் சுரேஷ் மனைவி செல்வி (43). இவா், பாப்பம்மாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் மா்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இச் சம்பவம் தொடா்பாக, ஆண்டிபட்டி காவல் கண்காணிப்பாளா் தங்ககிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் சிவக்குமாா், செளந்தரபாண்டி, குமரேசன் ஆகியோா் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்தனா். காவல் துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், புதன்கிழமை இரவு செல்வியுடன் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசிய 6 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT