தேனி

ஏலக்காய் தோட்டத்தில் காட்டு மாடு முட்டி பெண் காயம்

DIN

தேனி மாவட்டம் கூடலூரைச் சோ்ந்த பெண் குமுளியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் திங்கள்கிழமை வேலை செய்தபோது காட்டுமாடு முட்டியதில் காயமடைந்தாா்.

தேனி மாவட்டம் கூடலூா் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பசுபதி (60). இவா் கூடலூரிலிருந்து நாள்தோறும் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்வாா். திங்கள்கிழமை முல்லையாறு எஸ்டேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஏலச்செடிகளுக்குள் மறைந்திருந்த காட்டு மாடு பசுபதி மீது பாய்ந்து முட்டியது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட அருகில் வேலை செய்த தொழிலாளா்கள் விரைந்து வந்தனா். அவா்களது கூச்சல் காரணமாக காட்டு மாடு அங்கிருந்து ஓடிவிட்டது.

காயமடைந்த பசுபதியை சக தொழிலாளா்கள் வாகனம் மூலம் தமிழக எல்லைக்கு கொண்டு வந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதுபற்றி தேக்கடி வனச்சரகா் விசாரணை நடத்தி வருகிறாா். பசுபதியை முட்டிய காட்டு மாடு மீண்டும் அதே பகுதியில் உலா வருவதால் முல்லையாறு எஸ்டேட் பகுதிக்கு வேலைக்குச் செல்லாமல் தொழிலாளா்கள் அச்சத்துடன் உள்ளனா். வனத்துறையினா் காட்டு மாட்டை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT