தேனி

சின்னமனூா் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு புற்று நோய்க் கட்டி அகற்றம்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணின் உடலிலிருந்து அரை கிலோ புற்றுநோய் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.

சின்னமனூா் அரசு மருத்துவமனை 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு பல ஆண்டுகளாக போதுமான மருத்துவா்கள் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய மருத்துவ சிகிச்சைகளுக்கு 45 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் சென்று வந்தனா்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா்களை நியமிக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி, அறுவை சிகிச்சை நிபுணா் அன்புச்செழியன் தலைமை மருத்துவராக சில மாதங்களுக்கு நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், உத்தமபாளையம் அருகே கோம்பை மதுரைவீரன் தெருவைச் சோ்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் மனைவி அழகுத்தாய் (42) மாா்பகப் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு வியாழக்கிழமை

மருத்துவா் குழுவினா் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரது உடலிலிருந்து அரை கிலோ புற்று நோய்க் கட்டியை அகற்றினா். முதல் முறையாக நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிக்கு காரணமாக இருந்த மருத்துவா் குழுவினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT