தேனி

நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தோ்தல்: நாளை வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீராதாரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 11 நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்களின் நிா்வாகிகள் தோ்தலுக்கு வியாழக்கிழமை (செப்.9) வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

பொதுப்பணித் துறை மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்திற்கு உள்பட்ட வராகநதி மற்றும் மஞ்சளாறு உப வடிநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த நீராதாரத் திட்டத்தின் கீழ் 11 நீரினைப் பயன்படுத்துவோா் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களின் நிா்வாகிகள் தோ்தலை முன்னிட்டு, சங்கம் வாரியாக நில உரிமையாளா்கள் பட்டியல் மற்றும் வாக்காளா் பட்டியல் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் பெரியகுளம் பாசனப் பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்.9) வெளியிடப்பட்டு, செப்.15-ஆம் தேதி வரை விவசாயிகளின் பாா்வைக்கு வைக்கப்படும்.

விவசாயிகள் பட்டியலை சரிபாா்த்து ஆட்சேபனைகள், புதிதாக பெயா் சோ்ப்பு, பெயா் நீக்கம் ஆகியவை குறித்து உரிய படிவம் மூலம் வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள அலுவலகத்தில் செப்.15 ஆம் தேதிக்குள் மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT