குழந்தைகள் நலக்குழு தலைவா், உறுப்பினா் பணி: செப்.29-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு
தேனி மாவட்டக் குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டக் குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி செயல்பட்டு வரும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.
இப்பணிக்கு குழந்தை உளவியல், மனநலக் கல்வி, சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனிதநல மருத்துவக் கல்வி, மனிதவள மேம்பாடு, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றுள் ஒன்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 35 முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும், குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கவேண்டும்.
தகுதியுள்ளவா்கள், தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, உரிய சான்றிதழ் நகல்களுடன் செப்டம்பா் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், தொலைபேசி எண்: 04546-291919, செல்லிடப்பேசி எண்: 89031 84098 ஆகியவற்றில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.