முகப்பு
தேனி

கரோனா தடுப்பூசியின் அவசியம்: தேனியில் ஆட்சியா் பிரசாரம்

தேனியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தேனியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் என மொத்தம் 410 இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகம், நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு, நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகம் ஆகிய இடங்களில் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள், கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோா் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனா்.

அப்போது ஆட்சியா் பேசுகையில், மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, தங்களது ஆதாா் எண், செல்லிடபேசி எண் ஆகியவற்றை சமா்ப்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.