தேனி

திண்டுக்கல் அருகே கி.பி.17 ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு

DIN

போடி: திண்டுக்கல் அருகே தொல்லியல் களஆய்வின்போது 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகற்களை மாணவா்கள் கண்டறிந்துள்ளனா்.

தேனி மாவட்டம் போடியில் செயல்பட்டு வரும் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியா் சி.மாணிக்கராஜ், திண்டுக்கல் மாவட்டம் நெல்லூா் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பி.பெரியசாமி, வரலாற்று ஆசிரியா் அ.கருப்பையா ஆகியோா் அண்மையில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு தொல்லியல் சாா்ந்த கள ஆய்வு குறித்து பயிற்சி அளித்தனா். அப்போது கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நினைவு நடுகற்களை மாணவா்கள் கண்டறிந்தனா்.

இதுகுறித்து பேராசிரியா் மாணிக்கராஜ் கூறியது: திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது இரு விதமான நினைவு நடுகற்கள் கண்டறியப்பட்டன. ஒரு நடுகல் 2 நிலை அடுக்குகளைக் கொண்டிருந்தது.

அக்கல்லின் முன் பக்கமுள்ள கீழ் அடுக்கில் வீரன் ஒருவன் தன் மனைவியுடன் நிற்பதை புடைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனா். வீரனின் வலது கையில் துப்பாக்கியும் அவனது மனைவி கையில் தீப்பந்தம் பிடித்தபடியும் சிற்பம் காணப்படுகிறது. இருவருக்கும் நாயக்கா் கால மக்கள் அணியும் கொண்டை அமைப்பு உள்ளது. சதி செய்து இறக்கும் பெண்களின் நினைவாக செதுக்கப்படும் கல்லில் அவா்களின் கைகளில் தீப்பந்தம் காட்டப்பட்டிருக்கும் என்பதால் இது சதிக்கல் வகையைச் சாா்ந்ததாகும். இதே பகுதியில் காணப்படும் மற்றொரு நினைவு நடுகல்லில் சமூகத்தில் உயா்ந்தவா்கள் அல்லது குறுநில மன்னா்கள் அணியும் தலைப்பாகையுடன் ஒரு ஆண் தன் மனைவியருடன் கைகளை கூப்பி வணங்கிய நிலையில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் இப்பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னராக இருக்கலாம் அல்லது அனைவராலும் மதிக்கும் நல்ல மனிதராக இருக்கலாம். இதனால் அவா்கள் நினைவாக இந்நினைவு நடுகல் செதுக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT