தேனி

இடுக்கி மாவட்டத்தில் முழுக் கடையடைப்பு - போக்குவரத்து நிறுத்தம்

DIN

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது, இதனால் அங்கு போக்குவரத்திற்காக வாகனங்கள் இயங்கவில்லை.

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை பொது வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது. அதனை முன்னிட்டு கேரள மாநில எல்லையோரம் உள்ள தேனி மாவட்டத்தில் வழக்கம்போல் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கியது, கடைகள் திறக்கப்பட்டது.

அதே நேரத்தில் தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, வண்டிப் பெரியாறு, கட்டப்பனை, பீர்மேடு, புளியமலை நெடுங்கண்டம், வண்டன்மேடு உள்ளிட்ட அனைத்து, நகர, கிராம பகுதிகளில் உள்ள  கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கார், ஜீப், ஆட்டோ போன்ற வாடகைக்கு ஓடும் வாகனங்கள் இயங்கவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

பெரும்பான்மையான தேயிலை ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

அதேபோல் தேனி மாவட்டத்திலிருந்து  கேரளாவுக்கு சுமார் 1000 க்கும் மேலான ஜீப்  வாகனங்களில் வேலைக்கு செல்லும் தேனி மாவட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT