தேனி

கம்பம், கூடலூர் பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல்

DIN

கம்பம், கூடலூர் பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதில், 234 பேர்களை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி சி.பி.எம்., சி.பி.ஐ., இ. காங்கிரஸ், தொ.மு.ச., விடுதலை சிறுத்தைகள், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை காந்தி சிலை முன்பு கூடினர்.

மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர், சாலை மறியல் செய்ய ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். கம்பம் வடக்கு போலீசார் அவர்களை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பம் மெட்டு விலக்கில் தடுத்து நிறுத்தி, 11 பெண்கள் உள்பட 234 பேர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

கூடலூரில் மத்திய அரசைக் கண்டித்து சி.பி.எம். நகர செயலாளர் ஜெயராஜ் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் தொழிற்சங்கத்தினர் ஒன்று கூடினர். மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டவாறு சாலை மறியல் செய்ய பேருந்து நிலையம் அருகே உள்ள தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றனர். போராட்டக்காரர்களை கூடலூர் காவல் ஆய்வாளர் முத்துமணி, 3 பெண்கள் உள்பட, 113 பேர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT