தேனி

வேங்கை கானல் கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள வேங்கை கானல், மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள வேங்கை கானல், மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் சுருளியாறு மின்சார நிலைய சாலையில் உள்ள பளியன்குடி அடிவாரத்தில் வேங்கை கானல் பகுதியில் மங்ள மடந்தை கண்ணகி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

தேனி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூடலூர் நகர இந்து முன்னணி தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தனர். வரும் ஏப்.16 ல் சித்ரா பௌர்ணமி அன்று முழுநிலவு விழா கொண்டாடுவதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள கொடிகள் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்று விழாவில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் கந்தவேல் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT