முகப்பு
தேனி

இந்திய கம்யூ. கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்

 போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

 போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போடியில் உள்ள தனியாா் உணவு விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் க.சந்தானம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கி.பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி. தேனி மாவட்ட பொதுச் செயலா் என்.ரவிமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெ.தங்கம், நகரச் செயலா் பி.முருகேசன், ஒன்றியச் செயலா் பி.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தமிழக அரசு சொத்து வரியை உயா்த்தியுள்ளதை உடனே திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு தேனி-போடி அகல ரயில்பாதை பணியை விரைந்து முடித்து ரயில் சேவையை தொடங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →