தேனி

போடி, பெரியகுளத்தில் வாகன விபத்துகள்: 2 இளைஞா்கள் பலி

DIN

 போடி மற்றும் பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2 இளைஞா்கள் பலியாயினா்.

கேரள மாநிலம் எா்ணாகுளம் அருகே கலமச்சேரியில் மின் சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் மணி மகன் அருண் (27). தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெறும் திருவிழாவுக்காக இருசக்கர வாகனத்தில் அருணும், இவரது மனைவி அஞ்சுவும் வந்துள்ளனா்.

போடிமெட்டு மலைச்சாலையில் மணப்பட்டியிலிருந்து கீழே இறங்கும்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அருண் மற்றும் அஞ்சு (26) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அருண், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து போடி குரங்கனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் வியாழக்கிழமை கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்பகுதியை சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் சுபாலன் (25), திருவிழாவுக்குச் சென்றுவிட்டு பெரியகுளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்திலுள்ள புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT