இலவச விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வா் இன்று காணொலியில் கலந்துரையாடல்
தேனி மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் சனிக்கிழமை (ஏப்.16) காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறாா்.
தேனி மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் சனிக்கிழமை (ஏப்.16) காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறாா்.
சென்னை, தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறாா். இதில், தேனியில் பெரியகுளம் சாலையில் உள்ள வி.கே.வேலுச்சாமி சின்னம்மாள் கல்யாண மண்டபம், பெரியகுளத்தில் வத்தலகுண்டு சாலையில் உள்ள அரசு தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உத்தமபாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களில் கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க தேனி மின் வாரியம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த இலவச விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தேனி மின் வாரியம் அறிவித்துள்ளது.