கூடலூர் முனியாண்டி கோயில் சித்திரைத் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள். 
தேனி

கூடலூரில் முனியாண்டி கோயிலில் சித்திரைத் திருவிழா: தீ மிதித்து பக்தர்கள் பரவசம்

தேனி மாவட்டம் கூடலூரில் முனியாண்டி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் முனியாண்டி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது அருள்மிகு முனியாண்டி சாமி கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விழா கொண்டாட அனுமதிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் திருவிழாவில், முதல் நாளான செவ்வாய்க்கிழமை பெண் பக்தர்கள் முனியாண்டி சுவாமிக்கு பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர், ஆண் பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர்.

கோயில் அருகே தீ குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரண்டாவது நாளாக புதன்கிழமை அதிகாலை பொங்கல் வைத்தும், மாவிளக்கும்  எடுக்கின்றனர். மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து முல்லை பெரியாற்றில் ஆற்றில் கரைக்கின்றனர். 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் ஜென் ஸி-க்கு உள்ளது! ராகுல் காந்தி

இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை பொருத்தி நெல்லை அரசு மருத்துவமனை சாதனை!

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT