முகப்பு
தேனி

ஆட்டோ மோதி தொழிலாளி பலி

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சாலையை கடக்க முயன்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சாலையை கடக்க முயன்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அரண்மனைப்புதூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாக்கியராஜ்(50). இவா், அரண்மனைப்புதூா் முல்லைப் பெரியாற்று பாலம் அருகே சாலையை கடந்து சென்றுள்ளாா். அப்போது தேனியில் இருந்து அரண்மனைப்புதூா் நோக்கிச் சென்ற ஆட்டோ பாக்கியராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.