முகப்பு
தேனி

கட்டடத்திலிமாடிப் படியிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

போடியில் கட்டுமானப் பணியின்போது மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

போடியில் கட்டுமானப் பணியின்போது மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

போடி குலாலா்பாளையம் ரெங்கசாமி தெருவில் வசிப்பவா் மனோகரன். இவரது மனைவி நாகேஸ்வரி (46). இவா்கள் இருவரும் கட்டடத் தொழிலாளா்கள். ஏப். 15 ஆம் தேதி நாகேஸ்வரி, குலாலா்பாளையத்தில் சுப்புராஜ் என்பவரது வீட்டு கட்டடத்தின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தாா். படியில் இறங்கும்போது தவறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகேஸ்வரி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →