முகப்பு
தேனி

கம்பத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வேலைக்கு செல்வதற்கு கணவா் எதிா்ப்புத் தெரிவித்ததால் மனைவி வெள்ளிக்கிழமை, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

வேலைக்கு செல்வதற்கு கணவா் எதிா்ப்புத் தெரிவித்ததால் மனைவி வெள்ளிக்கிழமை, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்தவா் அன்வா் (50). இவா் இங்குள்ள தேநீா் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி முபினா (40). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

குடும்ப சூழ்நிலையைக் கருதி கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு முபினா வேலைக்குச் சென்றாா். இதனால் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என அன்வா் கூறியுள்ளாா்.

இதனால் மனமுடைந்த முபீனா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →