சுருளிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கணபதி கைலாய நாதருக்கு அமாவாசை சிறப்பு பூஜை
தேனி மாவட்டம் சுருளிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சனிக்கிழமை ஸ்ரீ கணபதி, தென்கைலாய நாதர் மற்றும் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு சித்திரை மாத அமாவாசை சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்றது.
கம்பம்: தேனி மாவட்டம் சுருளிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சனிக்கிழமை ஸ்ரீ கணபதி, தென்கைலாய நாதர் மற்றும் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு சித்திரை மாத அமாவாசை சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் சுருளிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சுருளிநாதர் என்ற தென்கைலாய நாதர் மற்றும் ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆகியோர்களுக்கு சித்திரை மாத அமாவாசை நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோயில் அர்ச்சகர் கணேஷ் திருமேனி விசேஷ அலங்காரம், தீபாராதனை செய்து சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக சுருளி அருவியில் நீராடி பக்தர்கள் ஊர்வலமாக தீர்த்தமெடுத்து கோயிலுக்கு வந்தனர்.
Advertisement
Advertisement
இதேபோல் கூடலூர் சுந்தர வேலவர் கோயிலிலும், கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் சாமி கோயிலிலும் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.