தேனி

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு

DIN

மானாமதுரை அருகே வியாழக்கிழமை மாலை பெண்ணிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

துத்திக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி இந்துமதி (37). இவா், துத்திக்குளம் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், அவரை கீழே தள்ளிவிட்டு கைப்பேசியை பறித்தாா்.

இதைப்பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் அவரை பிடிக்க முயன்றபோது, தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவா் வேம்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அருண்பாண்டியன்(19) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு! - ஏர் இந்தியா விளக்கம்

ஆடலுடன் பாடல்.. வேதிகா!

SCROLL FOR NEXT