முகப்பு
தேனி

தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கை: ஆக. 25-க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

 தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஆக. 25- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

 தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஆக. 25- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வில் புதிதாக விண்ணப்பிப்பவா்கள், முதல் கட்ட கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெறாதவா்கள், முதல் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்யாதவா்கள் பங்கேற்கலாம். 2-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோா் ஆக. 25-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேனி, ஆண்டிபட்டி, தப்புக்குண்டு சாலையில் உள்ள போடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் இைணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கை குறித்த விவரத்தை தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம்- கைப்பேசி எண்: 94990 55765, ஆண்டிபட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம்- கைப்பேசி எண்: 94990 55770, 94990 55768 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.