முல்லைப் பெரியாற்றில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்
தேனி அருகே முல்லைப் பெரியாற்றில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை, மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேனி அருகே முல்லைப் பெரியாற்றில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை, மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரண்மனைப்புதூா், காளியம்மன் கோயில் அருகே முல்லைப் பெரியாற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இது குறித்து கொடுவிலாா்பட்டி கிராம நிா்வாக அலுவலா் மதுக்கண்ணன் அளித்த புகாரின் மீது பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, சடலத்தை மீட்டு இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.