தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

DIN

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் குறைந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் தொடர்ந்து உயர்ந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது மழை பெய்யாததால் குறைந்து வருகிறது. சனிக்கிழமை அணைக்கு வினாடிக்கு, 1,126 கனஅடியாக வந்தது, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு, 366 கனஅடியாக வந்தது. 

மின் உற்பத்தி குறைவு: தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில், பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் அதிக அளவில் இருந்ததால் கடந்த ஜூலை. 4  முதல் நான்கு மின்னாக்கிகளில் மின்சாரம் உற்பத்தி 168 மெகாவாட்டாக உற்பத்தி நடைபெற்றது. 

தற்போது அணையில், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம்  குறைவாக வினாடிக்கு, 933 கனஅடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 136.00 அடி (மொத்த உயரம் 152), அணையில் நீர் இருப்பு 6,118 மில்லியன் கனஅடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு, 3,66 கனஅடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு, 933 கனஅடியாகவும் இருந்தது. 

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT