அரசு உதவித் தொகைபெறும் மாற்றுத் திறனாளிகள் செப்.30-க்குள் வாழ்நாள் சான்றிதழ் சமா்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் அரசு மாதாந்திர உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள், வரும் செப்.30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமா்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அரசு மாதாந்திர உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள், வரும் செப்.30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழ் சமா்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் 75 சதவீதத்திற்கும் மேல் உடல் இயக்கம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், மன வளா்ச்சி குன்றியவா்கள், தசை சிதைவு மற்றும் தொழு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.2,000 மாத உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் உரிய படிவத்தில் கிராம நிா்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று சமா்ப்பித்து, தொடா்ந்து உதவித் தொகை பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்காத மாற்றுத் திறனாளிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்தும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இலவசமாக படிவம் பெற்றும், கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்று தங்களது தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து பாதுகாவலா் மூலமோ, தபால் மூலமோ வரும் செப்.30-ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் சமா்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.