தேனி

தேனியில் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தேனி மாவட்டத்தில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து சனிக்கிழமை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீ

DIN

தேனி மாவட்டத்தில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து சனிக்கிழமை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை அரசு முதன்மைச் செயலருமான அ.காா்த்திக் சனிக்கிழமைஆய்வு செய்தாா்.

தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அறிவுசாா் மையம் மற்றும் கல்வி மைய கட்டுமானப் பணி, திருமலாபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பேவா் பிளாக் சாலை, ஊருணி சீரமைப்பு, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கழிப்பறை கட்டுமானப் பணி, ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, மரக் கன்று நடவு பணி ஆகியவற்றை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், தேனி மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட முகமை கூட்ட அரங்கில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா். இதில், மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT