தேனி மாவட்டம் கம்பத்தில் கடன் தொல்லை காரணமாக ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கம்பம் வரதராஜபுரம் தியாகராஜ பாகவதா் தெருவில் வசித்துவந்தவா் அய்யப்பன் மகன் ஜெயபிரகாஷ் (45). இவருக்கு மனைவி ஜெயந்தி, மகன், மகள் உள்ளனா். ஜெயபிரகாசுக்கு கடன் அதிகமாக இருந்ததால் மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு கணவன்- மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலையில் ஜெயந்தி அவா் எழுந்து பாா்த்த போது, ஜெயப்பிரகாஷ் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உறவினா்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா். ஜெயபிரகாஷ் மாலை நாளிதழ் ஒன்றில் நிருபராக இருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.