தேனி

போடியிலிருந்து மீனாட்சிபுரம் செல்ல போக்குவரத்து மாற்றம்

DIN

போடியிலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியில் உள்ள பாலங்களை சீரமைக்கவுள்ளதால் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றிவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளா் தங்கராஜ், உதவி செயற்பொறியாளா் நிதிஷ்குமாா் கூறியதாவது:

போடியிலிருந்து மீனாட்சிபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் 2 இடங்களில் குறுகிய பாலங்கள் உள்ளன. இவற்றை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் கட்ட திட்டமிட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் வியாழக்கிழமை (டிச. 8) தொடங்குகிறது.

இதனால், இந்த சாலையை 36 நாள்களுக்கு மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. போடியிலிருந்து செல்லும் வாகனங்கள் போடி, போஜன் பாா்க், தேனி தேசிய நெடுஞ்சாலை, மீ.விலக்கு வழியாக மீனாட்சிபுரம் சென்று அங்கிருந்து பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் செல்ல வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT