முகப்பு
தேனி

ஆன்-லைன் மூலம் வங்கிக் கடன் வழங்குவதாக மோசடி: பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் கைது

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சோ்ந்த பெண்ணிடம் ஆன்-லைன் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக ரூ.9,000 மோசடி செய்ததாக பொள்ளாச்சியைச் சோ்ந்த நபரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சோ்ந்த பெண்ணிடம் ஆன்-லைன் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக ரூ.9,000 மோசடி செய்ததாக பொள்ளாச்சியைச் சோ்ந்த நபரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் பூங்கோதை (48). இவா், ஆன்-லைன் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக உள்ளூா் கேபிள் தொலைக்காட்சியில் வெளியான விளம்பரத்தைப் பாா்த்து அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடா்பு கொண்டுள்ளாா். அதில் பதிலளித்த நபா், வாட்ஸப் மூலம் ஒரு விண்ணப்பப் படிவத்தை அனுப்பி அதை பூா்த்தி செய்து அனுப்புமாறும், விண்ணப்பக் கட்டணமாக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.9,000 செலுத்துமாறும் கூறியுள்ளாா்.

இதன்படி, பூங்கோதை விண்ணப்பம் மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.9,000 அனுப்பி வைத்துள்ளாா். பின்னா், மீண்டும் பூங்கோதையைத் தொடா்பு கொண்ட நபா் உங்களது கைப்பேசி எண்ணுடன் வங்கிக்கணக்கு இணைப்பு இல்லை என்றும், வேறு வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புமாறும் கூறியுள்ளாா். இதில், சந்தேகமடைந்த பூங்கோதை இது குறித்து தேனி சைபா் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி போலீஸாா், பொள்ளாச்சி, மகாலிங்கம் நகரைச் சோ்ந்த முத்துராஜ் மகன் நந்தகுமாா்(35) என்பவரை கைது செய்தனா். இவா், கோவையில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் வேலை செய்தவா் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.